Tamil

“பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவிட்டது என்பதற்கெல்லாம்,

என் வயதை ஏற்றிக்கொள்ள முடியுமா, சொல்லுங்கள்?

அட! செவ்வாய் கிரகத்திலாவது பிறந்து தொலைந்திருக்கலாம்.

ஏலியன் எவரும் வயதைப் பற்றிக் கேட்டால்,

எனக்கு ஓட்டுரிமைகூட இல்லை என்று சொல்லியிருப்பேன்.”

— பிறந்தநாள்
Tamil

“எழுதப்பட்ட  புத்தகமாய் வாசிக்க படும் எந்தன் வாழ்க்கையில்

எனக்கான சில பக்கங்களை இணைக்க

காந்தியின் காகித்தை தேடும் பேதையோ நான்?”

— காந்தியின் காகிதம்
Tamil

“என் ஆறறிவை எடுத்துக்கொண்டு ஐந்தறிவு மட்டும் கொடுத்துவிடுங்கள்!

என் இரண்டு கைகளையும் எடுத்துக்கொண்டு இரண்டு றெக்கைகளை மட்டும் கொடுத்துவிடுங்கள்!

என் ஆதார் கார்டையும், ரேஷன் கார்டையும் அழித்து என்னை அகதியாக்கிவிடுங்கள்!

பாஸ்போர்ட்டையும், விசாவையும் ஒழித்து என்னை உலகம் சுற்றவிடுங்கள்!

பகவத் கீதையையும், குரானையும், பைபிளையும் மீளுருவாங்கம் செய்துவிடுங்கள்!

அந்த வெள்ளைக் காகிதங்களை என் காலில் கட்டி காதலை வளர்த்திடுங்கள்!”

— பறவைகள்
Tamil

“கூரை மின்விசிறியுடன்

கூறா என் வாழ்க்கையும் சுழல

பிறந்தது புத்தாண்டு!”

— புத்தாண்டு
Tamil

“அவளுக்கு என்ன தேவையோ!

வலது கையில் பொம்மை ஸ்டிக்கர் அட்டையும், இடுப்பில் அவளது தம்பியும், பார்ப்பவரையெல்லாம், "அம்மா, அக்கா, அண்ணா, ஒண்ணே ஒண்ணு வாங்கிக்கோங்க" என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

அப்படி அவளுக்கு என்ன தேவையோ!

அந்த மத்திய பேருந்து நிலையத்தில் அவள் கால்படாத இடமே இருந்திருக்காது.

பறவை கூட உணவு தேட விழிக்காத அந்த அதிகாலை நாலு மணிக்கு

அவளுக்கு என்ன தேவையோ!

அவள் கேட்பவர்கள் எல்லோரும் இதன் தேவை என்னவென்று மறுத்துவிட்டார்கள்.

அதன் இரண்டின் தேவையும் அறியாத, அந்த இரண்டு கைகள், எப்போதும் காசைப் பெற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கும் அந்த இரண்டு கைகள், அப்போது அவளிடம் காசைக் கொடுத்து ஆசீர்வாதம் செய்துவிட்டுச் சென்றன.”

— அவளுக்கு என்ன தேவையோ
Tamil

“என்றோ ஒருவன் கொல்லப்பட்டானாம்

அதை இவர்கள் விடுமுறை விட்டு விழா ஆக்கிவிட்டார்கள்

அவனாவது ஒருமுறைதான் பழிவாங்கப்பட்டான்

ஆனால் நானோ வருடா வருடம் பழிதீர்க்கப்படுகிறேன்”

— பண்டிகை
English

“?: Mom, I can spin a much better web than these humans ever could!

!: Don't be racist, dear. They don't have eight legs like us. Poor creatures! I don't even know what they'll do with just four legs.”

— Spiders