பிழை யாது?

இங்க எல்லாமே எல்லாருக்கும் கிடைக்கிறது இல்ல. எல்லாருக்கும் பொதுவா கிடைக்கிறதும் அவங்களுக்கு பயணா இருக்குனு சொல்ல முடிறதில்ல.

பிழை  யாது?

மழைக்காலத் தொடக்கம், செமஸ்டர் லீவோட கடைசி சிலநாட்கள், வீட்டுல ரொம்பவே வெட்டியா இருந்துட்டேன். கொஞ்ச நேரம் நடக்கலாம்னு வெளில போனேன். கொஞ்சதூரம் நடந்ததும், அங்க ஒரு தரிசு இடத்துல நாலு சின்னபசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தானுங்க. சரி இதயாது பாக்கலானு அங்கேயே நின்னேன்.

அங்க சுத்தி ஒரே முள்ளு அப்படி இருந்தும்  ஒருத்தன் மட்டும் அதெல்லாம் பாக்காம செருப்புக்கூட போடாம விளையாடிட்டு இருந்தான். அவன் செருப்பு ஓரமா கெடந்துச்சு. டேய் தம்பி செருப்பு போட்டு விளையாடுடா நெருஞ்சிமுள்ளு இருக்குனு சொன்னான். அவன் பதிலுக்கு அண்ண அது புது செருப்புன எங்க அப்பா போனாவாரம் தான் வாங்கி குடுத்தாரு முள்ளு நெறைய இருக்கு செருப்புல குத்திடும்னு சொன்னான். அந்த பதிலுக்கு திரும்ப என்ன சொல்றதுன்னு தெரியாம எனக்குள்ள சிரிச்சுக்கிட்டன்.

நா அங்க வந்ததுல இருந்து ஒருத்தன் மட்டும்தான் பேட்டிங் பண்ணிட்டு இருந்தான். ஏன்டா நீயே பேட் பண்ணிட்டு இருக்க அவுட்லா இல்லையானு கேட்டேன். பந்து போட்டுட்டு இருந்த பையன் நான் தான்டா அடுத்துனு சொல்லிட்டு ஓடி வந்து பேட்ட புடுங்குனான். டேய் போட நான் பேட்ல தரமாட்டான் நீ வேகமா அடிப்ப. நீ போய்டு அந்த பேட்ல ஆடுனு சொல்லி பேட்ட புடிங்கிகட்டான். தென்னமட்டைல செஞ்ச பேட்ட எடுத்துட்டு வந்து பேட்டிங் பண்ணான். மிச்ச இருக்க ரெண்டு பேரும் மட்ட பேட்லதான் புடிச்சாங்க.

வெயில் மறைய தொடங்குனுச்சு, வானத்துல ஒரே மழைமேகமா இருந்துச்சு. நாலாவதா இருந்த பையன் டேய் இன்னைக்கு செம்மமழை வரப்போதுடா பாருங்கடா அதுக்குள்ள இருட்டிருச்சுனு கத்திட்டு இருந்தான். செருப்பு போடாம இருந்த பையன் வாங்கடா எல்லாரும் வீட்டுக்கு போலாம்னு செருப்ப எடுத்துக்கிட்டு ஓடுனான். மழைதான் இன்னும் வரலால வந்ததும் போலாம் இருடானு சொன்னான் பேட் வச்சுருக்கவன். வீட்டு கூரை மச்சுப்போச்சு, சீட்டு(plastic cover) மேல போடணும், இல்லனா உள்ளையும் மழைதான்.

மட்ட பேட் வச்சுருக்கவன் டேய் இருடா நானும் வரணு போனான். நாளாவது இருந்தவன் நீ ஏன்டா போற உங்க வீடுதான் ஓட்டு வீட்டுல அப்பறம் என்னடானு சொன்னான்.புதுசா ரோடு போடத்துல இருந்து வாசல் ரொம்பவே மட்டமா போச்சுடா மழை நெறய பேஞ்சா மழைதண்ணி வாசலுக்கு வந்துரும், அதான் வராத மாதிரி மண்ணு அள்ளி போடணும்டா, சொல்லிகிட்டே அவனும் ஓட்டுனான். மிச்ச இருந்த ரெண்டு பேரும், நம்ம வீடு மாடிவீடு அதுனால இந்த பிரச்சனை இல்ல நம்ம விளையாடலாம்னு பேசிகிட்டு விளையாட போனாங்க.

இங்க நடந்த நிகழ்வையும், வீடே இல்லாதவாங்க கதியையும் நிணைச்சுகிட்டே அங்கஇருந்து நடக்க ஆரம்பிச்சன். அத தவிர நம்மளால வேற என்ன பண்ண முடிது  எப்பவும்?

“மழை வேண்டின் காத்திருந்தோம் அனைவரும்

கிட்டியது பலருக்கு வீட்டின் மேல்மட்டும்

சிலருக்கு வீட்டின் உள்ளும் கொட்டும்

ஏற்றம் இறக்கம் பாராமல் ஒன்றென பொழிகின்றாய்

ஏனோ தாழ்வில் மட்டும் நிரம்பி வழிகின்றாய்”

BI
Published by BLACKINK
An independent personal publication for short stories, quiet lines, and reflections.